22nd April 2024 18:37:28 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக் கூட்டம் 2024 ஏப்ரல் 19 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவு வழங்கிய சேவைகள் அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களின் விபரம் பின்வருமாறு:
மக்கள் தொடர்பு அதிகாரி - திருமதி துஷாரி யட்டிவாவல அலுவிஹார
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - திருமதி நெலுகா நாணயக்கார
திட்ட ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் - திருமதி ஷுவன்திரினி ரோட்ரிகோ
இதன்போது உரையாற்றிய இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் கெப்டன் எம்.ஏ.டபிள்யூ நிமாஷா அவர்கள் முன்னைய கூட்டத்தின் அறிக்கையை வாசித்ததுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீ.ஜி.பீ.சீ குமாரி அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள், இலங்கை பொறியியல் படையணியில் சேவையாற்றும் நான்கு இராணுவ வீரர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா ரூ.600,000/- நிதியுதவியும், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்வதற்கு நான்கு இராணுவ வீரர்களுக்கு தலா ரூ.450,000/- நிதியுதவியும் வழங்கப்பட்டதுடன், மேலும் அதே நோக்கத்திற்காக சிவில் ஊழியருக்கு ரூ. 300,000/- நிதியுதவியும் ஒதுக்கப்பட்டது.
மேலும், திடீர் விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு ஒரு சிப்பாய்க்கும், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு சிப்பாய்க்குமாக தலா 75,000.00/= பெறுமதியான இரண்டு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன.
மேலும், மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் தலைவியின் திட்டத்திற்கு இணங்க, இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு தலா 100,000.00/= நிதியுதவியும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் வகையில், இலங்கை பொறியியல் படையணியின் 20 இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், 10 இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு இலங்கை பொறியியல் படையணியில் பணிபுரியும் சிவில் ஊழியர் ஒருவருக்கு ரூ.600,000.00/= பெறுமதியான நிதி நன்கொடையை வழங்கியதுடன், பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிர்மாணிப்பதற்காக இராணுவ வீரருக்கு ரூ. 450,000.00/= ஒதுக்கியுள்ளது.
இதே நிகழ்வின் போது, கெமுனு ஹேவா படையணி, கஜபா படையணி மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவிகளான திருமதி மனோரி வெலகெதர, திருமதி திலுபா பீரிஸ் மற்றும் திருமதி சுரங்கி அமரபால ஆகியோரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவிக்கு நன்கொடைகளை வழங்கினர்.
மாதாந்த பொதுக் கூட்ட நிறைவின் போது பங்கேற்பாளர்களுக்குதேன/ர் விருந்து வழங்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.