19th April 2024 10:51:12 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 09 ஏப்ரல் 2024 அன்று இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையக மைதானத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெரும் திரளான படையினரின் பங்கேற்புடன் புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப்புத்தாண்டு கொண்டாடத்தில் யானைக்கு கண் வைத்தல், சமநிலை ஓட்டம், பனிஸ் சாப்பிடுதல், ஓலை நெய்தல், தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல் மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் இடம்பெற்றன.
வெற்றியாளர்களுக்கு சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் அனுசரணையுடன் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.