19th April 2024 10:58:35 Hours
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் , சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, கொஸ்கமவில் 10 ஏப்ரல் 2024 அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
பிரதி பதவி நிலைப் பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பீ சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் ஆகியோர் பாரம்பரிய விளக்கேற்றியதனை தொடர்ந்து விழா ஆரம்பமானது.
பனிஸ் உண்ணுதல், தலையணை சண்டை, ரபான் இசைத்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் மிகவும் மகிழ்விக்கும் வகையில் அன்றைய நிகழ்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தின.
விழாவின் முடிவில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கின்னங்களை வழங்கினர்.
சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அவர்களது மனைவிகள் மற்றும் பிள்ளைகள் புத்தாண்டு மரபுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் தொடர்புடைய வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த நேரத்தை கழித்தனர்.