18th April 2024 18:51:16 Hours
கொமாண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டத்துடன் இணைந்து, 24 மார்ச் 2024 அன்று கனேமுல்லவில் கொமாண்டோ படையணி அதிகாரிகள் உணவறையில் அழகு கலாசாரப் பட்டறை நடாத்தப்பட்டது.
பட்டறையினை போ எவர் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திருமதி சாந்தனி பண்டார நடத்தினார். இந்நிகழ்வில் கொமண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவு கீதம் இசைக்கப்பட்டதுடன் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கொமண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி கூட்டத்தில் உரையாற்றினார்.
சில அழகியல் நிகழ்வுகள் நிகழ்வை வண்ணமயமாக்கியதுடன் கொமண்டோ படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசீ சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.