18th April 2024 18:37:57 Hours
இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தனது 25 வது வருடாந்த பொதுக் கூட்டத்தை 2024 மார்ச் 24 அன்று, ரொக் ஹவுஸ் முகாம் அதிகாரிகள் உணவறையில் நடாத்தியது, இதில் இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சமங்கிகா பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தின் போது படையணியின் ஐந்து வீரர்களுக்கு தங்கள் வீடுகளின் எஞ்சிய கட்டுமான பணிகளை நிறைவு செய்துக் கொள்வதற்கு தலா ரூபாய் 350,000 பண உதவி வழங்கப்பட்டது. மேலும், 123 சிவில் ஊழியர்களுக்கு தலா ரூ.7,500க்கு மேல் மதிப்புள்ள உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட SINGALONG - 2023 நிதி திரட்டும் நிகழ்வின் ஊடாக இதற்கான நிதி திரட்டப்பட்டது. மேலும், ‘ரணவிரு செவன – ராகம’வில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் 3 வது இலங்கை கவச வாகனப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏபிடீ மதுசங்க குமாரவுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் திருமதி தலதா உபுல்மலி பிரேமதிலக்க அவர்களின் அனுசரனையில் சக்கர நாற்காலி பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஏ. காரியவசம் அவர்களால் 'மறைமுக வருமானம் உழைத்தல் எப்படி,' என்ற தலைப்பில் விரிவுரையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் இராணுவ நடனக் குழுவின் நடன நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து பிரபல இரட்டையர்களான ஜனாய் பிரியாய் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்வும் நிகழ்விற்கு பொழுது போக்கை சேர்த்தன.