18th April 2024 18:32:13 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 ம் ஆண்டுக்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 11 ஏப்ரல் 2024 அன்று குருவிட்ட பொது விளையாட்டரங்கில் சேவை வனிதையர் பிரிவின் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்தையில் கெமுனு ஹேவா படையணி படையலகுகள் மற்றும் அப்பகுதியின் வர்த்தகர்களால் பலதரப்பட்ட மளிகை பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய பல விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுருந்தன. இந்நிகழ்வு கெமுனு ஹேவா படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சந்தையில் ஏராளமான சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் பயன்பெற்றனர்.