18th April 2024 18:26:21 Hours
பாரம்பரிய மரபுகளுக்கு இணங்க, சிங்கள தமிழ் புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் வகையில், 17 ஏப்ரல் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து நடைபெற்றது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் இன்றியமையாத அம்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் இனிப்பு வகைகள் மற்றும் சிறப்பு பாரம்பரிய உணவுகள் தேநீர் விருந்தை அலங்கரித்தன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தேநீர் ஏற்பாட்டின் போது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஊழியர்களுடன் தலைவி சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.