17th April 2024 17:21:13 Hours
கொமாண்டோ படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொமாண்டோ படையணி சேவை வனிதையரினால் 2024 மார்ச் 17 அன்று கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு 16 பரிசுப்பொதிகள் கொமாண்டோ படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க கலந்து கொண்டு பரிசுப் பொதிகளை பெறுனர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.