16th April 2024 17:47:22 Hours
படையணியின் படையினரின் நலனோம்பு மற்றும் அவர்களின் பண்டிகைக் காலத் தேவைகளை சலுகை விலையில் வாங்குவதற்கான தளத்தை உருவாக்குதல் என்பவற்றை நோக்காக கொண்டு இலங்கை சமிஞ்சை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புத்தாண்டு சந்தை 09 ஏப்ரல் 2024 அன்று படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கை சமிஞ்சை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோர் நிகழ்வில் அதிதியாக கலந்துக் கொண்டதுடன் ஒவ்வொரு கடைத் தொகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்.
இலங்கை சமிஞ்சை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புத்தாண்டு சந்தையில் அரிசி, காய்கறிகள், பழங்கள், இறைச்சி, இனிப்புகள், ஆடைகள் மற்றும் ஏனைய வீட்டு உபயோக பொருட்கள் என்பவற்றை உள்ளடக்கிய கடைகள் சமிஞ்சை படையலகுகள், சமிஞ்சை பாடசாலை மற்றும் சமிஞ்சை பிரிகேட் ஆகியவற்றினால் கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் புத்தாண்டு சந்தையில் பயன் பெற்றனர்.