16th April 2024 17:41:02 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரினால் 09 ஏப்ரல் 2024 அன்று பொல்லேங்கொட, நாரஹேன்பிட்ட இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் பணியாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
முல்லைத்தீவு பொலிஸ் படைகளின் கட்டளை படையினரினால் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன் முல்லைத்தீவு பொலிஸ் படைகளின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேடிஎன் கருணாரத்ன யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வினை மேற்பார்வையிட்டார். இந்நிகழ்வில் இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தலா ரூபா 5000- மதிப்புள்ள உலர் உணவு பொதிகளை வழங்கினார்.
இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் அனுசரனையின் மூலம் இந்நிகழ்வு நடாத்தப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.