16th April 2024 17:44:37 Hours
வருடாந்த நிகழ்வுகளுடன் இணைந்து, மத்திய ஆயுத மற்றும் வெடிமருந்து களஞ்சியசாலையானது 2024 மார்ச் 31 ஆம் திகதி இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் அனுசரணையில் நன்கொடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது..
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, வடக்கு வழங்கல் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடீஓ அவர்களின் வழிகாட்டுதலுடன் இடம்பெற்றது.
இந்த உலர் உணவு பொதிகளின் நன்கொடை ஆனது போர் வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகக் அமையபெற்றது. மேலும், அப்பகுதியில் உள்ள சிறார்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.