16th April 2024 00:07:49 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு விழாவை 06 ஏப்ரல் 2024 அன்று படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் பிற அழைப்பாளர்கள் கிராமத்து வீடு 'கெமி கெதர' வில் மங்கல விளக்கை ஏற்றி, வளாகத்தில் உள்ள சிறப்பு இடங்களைப் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் வண்ணம் சேர்க்கும் முகமாக பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் இடம்பெற்றன.
இறுதியில், இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் பிற அழைப்பாளர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் கொமண்டோ படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள்,சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.