16th April 2024 00:02:04 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு 2024 ஏப்ரல் 02 அன்று விஜயம் செய்தார்.
தனது விஜயத்தின் போது, சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்கள் வகுப்பறைகளில் பிள்ளைகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் நலம் விசாரித்து அவர்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கினார். மேலும் பிள்ளைகளின் நடிப்பு மற்றும் பாடும் திறமையையும் அவர் நேரில் கண்டுகளித்தார்.
விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், தலைவி அவர்கள் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார். பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மைய பணிப்பாளர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றம் இடம்பெற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.