Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th April 2024 16:57:25 Hours

இராணுவ சேவை வனிதையரினால் செரிக் சிறப்பு தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான சிறப்பு புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்ய ஆதரவு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களால் செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு ஏப்ரல் 09, 2024 அன்று சிறப்புத் தேவையுடைய பிள்ளைளுக்கான சிறப்பு புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்வதற்காக நிதி உதவியாக ரூ. 100,000.00 வழங்கப்பட்டது.

செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபையின் கீழ் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக செயற்பட்டு வருகின்றது. தற்போது, சிறப்புத் தேவைகளைக் கொண்ட 102 பிள்ளைகளின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டை செனஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் வழங்குவதுடன் அவர்கள் தேவையான ஆதரவையும் கவனிப்பையும் பெறுவதை உறுதிசெய்கிறது.

செனஹாச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மைய பணிப்பாளரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் ஜீஜீஆர் மதுகொட யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.