12th April 2024 16:55:24 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் சேவைவனிதையர் பிரிவில் பணிபுரியும் இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 09 ஏப்ரல் 2024 அன்று 200 உலர் உணவுப் பொதிகளை இராணுவ சேவைவனிதையர் காரியாலயத்தில் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அந்த உலர் உணவு பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந் நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இராணுவ சேவைவனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.