11th April 2024 15:09:34 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரால் அதன் தெரிவு செய்யப்பட்ட இராணுவ மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 200 உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 2024 ஏப்ரல் 09 அன்று 7 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணி வளாகத்தில் வழங்கப்பட்டது.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபால அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அந்த பரிசுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.