09th April 2024 13:03:11 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு 2024 ஏப்ரல் 06 அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் பரிசுப் பொதிகளை விநியோகித்தனர்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிரா பெரியா ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அந்த பரிசுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.