05th April 2024 15:06:09 Hours
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 மார்ச் 02 ஆம் திகதி அனுராதபுரம் அபிமன்சல I நலவிடுதிக்கு அங்கு புனர்வாழ்வு பெறும் போர் வீரர்களின் நலம் பற்றி விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தது.
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ அவர்களின வழிகாட்டுதலின் கீழ் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், அங்குள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகளையும், நலவிடுதிக்கு அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினர். பின்னர், தேநீர் விருந்தும் வழங்கினர். அதைத் தொடர்ந்து, போர் வீரர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் வழங்கும் விதமாக இசை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.