04th April 2024 11:59:49 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் தலைவி வைத்தியர் நில்மினி பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 மார்ச் 23 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் பெண்களுக்கான அத்தியாவசிய சுகாதார தேவையான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட விரிவுரையை நடாத்தியது. நோயினை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவார்ந்த தகவலை இந்த விரிவுரை வழங்கியது.
மேலும், பெண்களின் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தும் வகையில், பிரித்தானிய அழகுசாதனப் பொருட்களால் அழகு கலாசார நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.
மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றதுடன், பங்கேற்பாளர்களின் ஈடுபாடு, ஆரோக்கியம் மற்றும் அழகு விழிப்புணர்வுக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.