Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

03rd April 2024 14:01:43 Hours

இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக் கூட்டம்

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 2024 மார்ச் 23 ஆம் திகதி இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் லெப்டினன் கேணல் சுஜித் சாமிந்த எதிரிசிங்க அவர்களினால் ‘ஒரு போராளியின் மனைவியின் பங்கு’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.