03rd April 2024 13:04:26 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) முருங்கனுக்கு அண்மையிலுள்ள விக்கும்புர கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
விக்கும்புர கிராமத்தை அடைந்ததும், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுடன் அவர்களின் நல்வாழ்வைப் பற்றி கலந்துரையாடியதுடன், கிராமத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்தனர், மேலும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உலர் உணவுகள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினர்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இராணுவச் செயலாளர், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.