01st April 2024 18:57:54 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சிவென்ட்ரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 மார்ச் 2024 அன்று இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணரான திருமதி சாந்தனி பண்டார அவர்கள் பெண்களின் அழகைப் பேணுதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையை ஆற்றினார்.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.