01st April 2024 13:48:27 Hours
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 27 மார்ச் 2024 அன்று அத்திட்டிய மிஹிந்து செத்மெதுரவில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெறும் போர்வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தனர்.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷம்மி ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விஜயம் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அங்கு வசிக்கும் போர் வீர்ரகளுடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சேவை வனிதையரினால் போர்வீரர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அத்திட்டிய மிஹிந்து செத்மெதுரவிற்கு 02 தொலைக்காட்சிகள் மற்றும் போர்வீர்ர்களுக்கு பரிசுப்பொதிகளையும் வழங்கினர். இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.