01st April 2024 13:47:57 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 மார்ச் 28 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் முன்னாள் சமிக்ஞை வீரரின் மனைவிக்கு ஊன்றுகோல் ஒன்றை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த போர் வீரர் 1974 முதல் 1996 வரை இலங்கை சமிஞ்சை படையணியில் பணியாற்றி 22 வருட சேவையின் பின் ஓய்வுபெற்றார். இவரின் மனைவியான திருமதி ஷியாலதா குணரத்ன அவர்கள் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் ஐந்து நாட்களாக எலும்பியல் சேவையில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு நடைப்பயிற்சியின் போது உதவிக்காக ஊன்றுகோல் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன், மருத்துவமனையில் நோயாளரை பார்வையிட்டதுடன் அவருக்கு மிகவும் தேவையான நடைப்பயிற்சிக்கான ஊன்றுகோலை வழங்கினர்.