01st April 2024 19:06:21 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 மார்ச் 26 அன்று குருநாகல் சந்தகல விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான நன்கொடை திட்டத்தை முன்னெடுத்தது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 107 விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு அத்தியவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
நன்கொடையைத் தொடர்ந்து, மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இசைக்குழுவினால் இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.