01st April 2024 11:49:43 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 மார்ச் 23 ஆம் திகதி 5 வது கெமுனு ஹேவா படையணி போர் வீரர்களின் நினைவு தூபியில் மறைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி. வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உயிரிழந்த 74 போர்வீரர்களின் 166 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
மேலும் நினைவு கூறல் படங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.