01st April 2024 09:44:43 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவு கொழும்பு இலங்கை கண் தானச் சங்கத்துடன் இணைந்து, 2024 மார்ச் 26 அன்று இராணுவப் புலனாய்வுப் படையணி கரந்தெனிய பிரதேச மக்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானியும் இராணுவப் புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம் மருத்துவ முகாமில் 288 பொதுமக்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டதுடன், பார்வை குறைப்பாடுள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.