26th March 2024 15:55:01 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் அழகு கலாசாரம் மற்றும் பேஷன் வடிவமைப்பு தொடர்பான செயலமர்வு 2024 மார்ச் 23 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. வஜிர பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 150 துணைவியார்களின் பங்கேற்புடன் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில் அழகுக்கலை நிபுணர் திரு. சந்திமால் ஜயசிங்க மற்றும் பேஷன் வடிவமைப்பாளர் திரு. ருக்மல் சேனாநாயக்க ஆகியோரின் நிபுணத்துவம் மற்றும் அறிவு பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க அறிவை வழங்கியதுடன், அழகு கலாசாரம் மற்றும் நாகரிகம் பற்றிய அவர்களின் புரிதலையும் மேம்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில், 18 கர்ப்பிணி துனைவியர்களுக்கு அத்தியாவசிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் அதே நாளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய செயற்குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.