26th March 2024 15:46:05 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், தற்கொலை தடுப்பு பற்றிய விரிவுரை 21 மார்ச் 2024 அன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி இலங்கை இராணுவ பொது சேவை படையணி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விரிவுரையில் 500 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டம் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு படையணி தலைமையகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு மாவட்ட 306 சீ1 பிராந்திய 3 லயன்ஸ் கழகம் அனுசரணை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் படையணியின் நிலைய தளபதி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், லயன் ஆளுனர் திரு.பந்தக தாபரே மற்றும் லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பங்கேற்பாளர்களுக்கு லயன்ஸ் கழகத்தின் நிதியுதவியில் இலவச ஒரு நாள் பயிற்சியில் கலந்துகொள்ள வாய்ப்பும் வழங்கப்பட்டது.