26th March 2024 15:35:54 Hours
இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுரங்கி அமரபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு இராணுவ பொறியியல் சேவைகள் படையணி வீரர்களின் கர்ப்பிணித் துணைவியார்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் 2024 மார்ச் 23 ஆம் திகதி பனாகொடை போதிராஜாராம விகாரையில் போதி பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, நிகழ்வில் கலந்துகொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.