Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th March 2024 18:09:18 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் பௌத்த துறவிகளுக்கு நன்கொடை

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கங்கொடை மற்றும் பிலிமத்தலாவை ஸ்ரீ வித்யாதீப மேனி பிரிவேனாவின் பௌத்த பெண் துறவிகளுக்கு மருந்து, சுகாதார பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி 17 மார்ச் 2024 அன்று நடாத்தினர்.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.