20th March 2024 17:08:01 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் யாழில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு 2024 மார்ச் 16 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஒட்டகப்புலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 30 மாணவர்களுக்கு பாடசாலை வளாகத்தில் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்களின் அனுசரணையுடன் பாடசாலை உபகரணப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, யாழில் உள்ள என்ஆர்எஸ் ஒப்டிகல் தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் தையிட்டி - தெற்கில் வசிக்கும் தேவையுடைய 27 முதியவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.