15th March 2024 14:13:43 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சர்வதேச மகளிர் தினம் 2024 மார்ச் 09 ஆம் திகதி களுஅக்கல அம்பலம ஓய்வு விடுதியில் இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது.
துறைசார் நிபுணரான திருமதி மாதவி மலைகொட ஆரியபந்து அவர்களின் "எழுச்சியூட்டும் சமுதாயத்தை கட்டியெழுப்பும் இதயத்தில் பெண்கள்" என்ற பெண்களின் முக்கிய பங்கை பிரதிபலிக்கும் ஊக்கமூட்டும் உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் கலந்து கொண்டார்.
இறுதியில் இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நிலுபா மகாதந்திலா, இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்