14th March 2024 16:33:21 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 11 மார்ச் 2024 அன்று சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நன்கொடை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் தெரிவுசெய்யப்பட்ட 75 பேர்களில் 13 பெண் சிப்பாய்களும், 2 பெண் சிவில் ஊழியர்களும், அடையாளமாக அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து வேதர மாவட்ட மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவ ஆலோசகரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் (SEARO) சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளருமான வைத்தியர் மகேந்திர ஏக்கநாயக்க, "நேர்மறை காரணிகள் ஊடாக பெண்களின் நல்லாரோக்கிய பாராமரிப்பு " என்ற தலைப்பில் ஒரு சிறந்த விரிவுரையை நிகழ்த்தினார்.
இறுதியில், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.