14th March 2024 16:39:50 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் படையணி தலைமையகம் மற்றும் முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியவற்றில் பணிபுரியும் சிவில் பணியாளர்களுக்கு 15 உலர் உணவுப் பொதிகளை 2024 மார்ச் 07 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விநியோகித்தனர்.
இந்த நன்கொடை நிகழ்வு இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் அனுசரணையின் மூலம் சாத்தியமானது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.