14th March 2024 16:46:02 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் 10 மார்ச் 2024 அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. அதன் போது தொடர் நன்கொடை திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன..
நிகழ்வின் போது, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி குடும்பங்களைச் சேர்ந்த 31 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 10,000.00 பெறுமதியான கார்கில்ஸ் வவுச்சர்களும், உயர்தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற சிவில் ஊழியர் ஒருவரின் மகளுக்கு அவளது உயர் கல்விக்கு ரூ. 50,000.00 புலமைப் பரிசும் வழங்கப்பட்டன.
மேலும், மற்றொரு அதிகாரவாணையற்ற அதிகாரியின் விஷேட தேவையுள்ள மகளுக்கு சத்துணவு பொருட்களும் சுகாதாரப் பொருட்களும் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனி தயர் பிரிவு தலைவி திருமதி ஷெஹானி பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.