14th March 2024 09:18:11 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 100 உலர் உணவுப் பொதிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.