11th March 2024 17:58:15 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவு 100 இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் துணைவியர்களுக்கான நிகழ்ச்சியை 09 மார்ச் 2024 அன்று ஓகின்ரீச் மண்டபத்தில் நடாத்தியது. இந்நிகழ்ச்சி இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
இத்திட்டம், தகவல் தரும் விரிவுரைகள் மூலம் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதுடன், திருமதி இந்து செனவிரத்ன அவர்களினால் "பெண்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் செயலமர்வை நடாத்தப்பட்டது. அதேவேளை போரெவர் பியூட்டி தயாரிப்புகளின் நிறுவுனரான திருமதி சாந்தனி பண்டார, அவர்கள் "தனிப்பட்ட அழகு பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள்" பற்றிய தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் பெண் நல்வாழ்வு பற்றிய கருத்துக்களை திருமதி புஸ்பா ரம்யா பகிர்ந்துக்கொண்டார். மேலும், மூன்று பேச்சாளர்களுக்கும் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
மகளீர் தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சிறப்புப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.