22nd February 2024 19:02:55 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் ஹிமாலி நியங்கொட அவர்களின் வழிகாட்டுதலில் புத்தக நன்கொடை நிகழ்ச்சி 19 பெப்ரவரி 2024 அன்று இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி கணக்கியல் அதிகாரிகள் இத்திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்து கொண்டார். படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 100 பிள்ளைகளுக்கு அத்தியாவசிய கல்வி உபகரணங்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு பரிசுப் பொதியும் ரூ. 15,000 பெறுமதியுடையதாகவும், புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்களை உள்ளடக்கியிருந்தது. நன்கொடை நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிள்ளைகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி நிலைய தளபதி, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.