05th March 2024 16:26:37 Hours
விஷேட படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் 01 மார்ச் 2024 அன்று பல்லேபொல வீர மத்தும பண்டார பாடசாலையில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. விஷேட படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் மற்றும் விஷேட படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீஎஸ் பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ வழிகாட்டுதலின் கீழ் கல்விக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் முகமாக மதிய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.
மேலும் விஷேட படையணி படையினர் பிள்ளைகளின் கல்வியை தொடர பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இடத்தை உறுதி செய்யும் வகையில், பாடசாலையில் முழுமையான தூய்மையக்கல் திட்டத்தையும் நடத்தினர்.
இந்நிகழ்வில் விஷேட படையணியின் நிலைய தளபதி கேணல் எச்எஸ்டப்ளியூகே கல்ஹேனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள். அதிகாரிகள் மற்றும் விஷேட படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.