Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th March 2024 14:36:20 Hours

இராணுவ சேவை வனிதையரின் மாதாந்த பொதுக்கூட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுகூட்டம் 2024 மார்ச் 01 ம் திகதி இராணுவத் தலைமையக வளாகத்தில் படையணி சேவை வனிதையர் பிரிவுகளின் தலைவிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீததுடன் ஆரம்பமானதுடன் உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரின் சேவை அடங்கிய ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய தலைவி, அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, முந்தைய கூட்டத்தின் அறிக்கையினை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்று செயலாளர் கெப்டன் எம் ஏ டப்ளியூ நிமாஷா வாசித்தார், மேலும் கணக்காய்வு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர் மேஜர் பீஜிபீசி குமாரி சமர்ப்பித்தார்

பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி அவர்கள் கொமாண்டோ படையணியில் சேவையாற்றும் ஐந்து இராணுவத்தினருக்கு ஓரளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்கினார். மேலும் கொமாண்டோ படையணியில் பணிபுரியும் ஒரு சிவில் ஊழியரின் மனைவியின் கண் நோயிற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், கொமாண்டோ படையணியில் பணியாற்றும் பத்து சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மாதாந்த கூட்டத்தின் நிறைவில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டதுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அனைத்து உறுப்பினர்களுடன் சுமுகமாக உரையாடினார்.