29th February 2024 12:44:37 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் 24 பெப்ரவரி 2024 நலன்புரி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கெமுனு ஹேவா படையணி பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 170 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடைந்தனர்.
நிகழ்வின் போது, 11 மாணவர்கள் பாடசாலை உபகரணப் பொதிகளைப் பெற்றுக்கொண்டனர், அதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிகரமான தேநீர் மற்றும் மதிய உணவு விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. மேலும், 4 வது கெமுனு ஹேவா படையணியில் மறைந்த போர் வீரரின் மகனுக்கு ரூ. 50,000.00 அவரது கல்வித் தேவைகளுக்கான உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் திரு.பிரகலித்த புஷ்பகுமார, திருமதி பிரியங்கா கலப்பத்தி, திருமதி.கங்கா முத்துக்குமாரண, திருமதி.துசிதா சேனதீர மற்றும் திருமதி உதுலா கஸ்துரியாராச்சி ஆகியோரால் நிகழ்ச்சித்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.