01st March 2024 15:16:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 29 பெப்ரவரி 2024 அன்று பாங்கொல்லை 'அபிமன்சல - 3' நலவிடுதிக்கு அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் புனர்வாழ்வின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளை பார்வையிடுவதன் நோக்கமாக் கொண்டு விஜயம் செய்தார்,
தனது விஜயத்தின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி போர் வீரர்களை பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் நினைவாக குழு படம் எடுத்துகொள்ளப்பட்டது.
போர்வீரர்களின் ஆக்கத்திறன்களை அங்கீகரித்த தலைவி, அவர்களின் குறிப்பிடத்தக்க திறன்களை அங்கீகரித்து அவர்களின் கைவினைப் பொருட்களைப் பாராட்டினார். மேலும், போர் வீரர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிரந்தரமாக காயமடைந்தவர்களுக்கு, சிறப்பு பரிசுப் பொதிகளையும், நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நீச்சல் குளத்தைப் பராமரிப்பதற்கான அத்தியாவசிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது 'அபிமன்சல - 3' இன் தளபதி, தலைவிக்கு நன்றியைத் தெரிவித்துகொண்டதுடன் அவருக்கு பாராட்டுச் சின்னத்தையும் வழங்கினார்.
புறப்படுவதற்கு முன், திருமதி ஜானகி லியனகே விருந்தினர் பதிவேட்டுப புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
திருமதி லியனகே இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் காகித மறுசுழற்சி திட்டத்தையும் பார்வையிட்டார் அத்துடன் வளாகத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையையும் பார்வையிட்டார்.
இந்த ஏற்பாட்டில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.