27th February 2024 18:42:41 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் 25 வது வருடாந்த பொதுக்கூட்டம் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. மனோரிவெலகெதர அவர்களின் தலைமையில் கெமுனு ஹேவா படையணி தலைமையத்தில் 2024 பெப்ரவரி 23 அன்று நடைப்பெற்றது.
அமர்வின் போது, அனுபவமிக்க அழகுக்கலை நிபுணரான திருமதி துலானி சிசிரகுமாரி பெண்களின் அழகு பராமரிப்பு மற்றும் மேம்பாடு பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்கும் அறிவொளி விரிவுரையை வழங்கினார். கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலானி சிசிரகுமாரிக்கு நன்றியைத் தெரிவித்து அவருக்கு பாராட்டுச் சின்னத்தை வழங்கினார். மேலும் சமீபத்தில் திருமணமான மூன்று அதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
அதேசமயம், பெல்மடுல்ல, மிதுரு சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 20 சிறுவர்களுக்கான ஈடுபாடுமிக்க செயற்பாடுகள் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இடம்பெற்றது. பிள்ளைகள் நீச்சல் குளத்தில் நீர் விளையாட்டுகள் மற்றும் இசை நிகழ்வுகளுடன் நிறைந்த ஒரு நாளை கொண்டாடினர்.