26th February 2024 15:51:50 Hours
இலங்கை இராணுவ விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினால் 24 பெப்ரவரி 2024 அன்று அனுராதபுரம் சாலியபுரத்தில் உள்ள 'மித்ரா மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகள் பராமரிப்பகத்தில் நன்கொடை நிகழ்ச்சியை நடத்தியது. அதன்படி, ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இனிப்புகள், மருந்து, பால் மா மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது.
இராணுவ விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் மற்றும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ விஷேட படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி ஆகியோர் நிகழ்வுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.
2 வது இராணுவ விஷேட படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் வைஎம்ஏகேபி அபேவர்தன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார். இராணுவ விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.