22nd February 2024 12:29:47 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த கூட்டம் 19 பெப்ரவரி 2024 அன்று கலுஅக்கல அம்பலம லெஷர் லொஞ்ஜில் இடம்பெற்றது. இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் அவர்கள் இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் முதலாவதாக 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த நாட்காட்டியை விவாதிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், 08 மார்ச் 2024 இல் கொண்டாடவிருக்கும் மகளிர் தின நிகழ்ச்சி அட்டவணை தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், வேவையில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூக்குகண்ணாடி விநியோகம் உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இக் கூட்டத்தில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.