22nd February 2024 12:27:41 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஸ்வென்ட்ரினி ரொட்ரிகோ உட்பட இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் முல்லேரியா தேசிய மனநல நிலையத்தின் விடுதி 5 க்கு 2024 பெப்ரவரி 12 ம் திகதி விஜயம் மேற்கொண்டனர்.
அவர்களது வருகையில் விடுதியில் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இராணுவ கலிப்சோ இசைக்குழுவினரால் பொழுதுபோக்கான இசையும் வழங்கப்பட்டது.
அதே சமயம், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் விடுதியில் வசிப்போருக்கு பரிசுப் பொதிகளும் வழங்கினர்.