15th February 2024 12:45:57 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 பெப்ரவரி 11 ம் திகதி அனுராதபுரம் சாலியபுர 'சதுட்ட சிறுவர் இல்லத்தில்' நன்கொடை திட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியும் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வானது சிறுவர் இல்லத்தில் வசிக்கும் 28 சிறுவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த மகிழ்ச்சியான மதிய உணவு உபசரிப்புடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்த திட்டத்திற்கு மேலதிகமாக, ஒவ்வொரு சிறுவர்களுக்கும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் பழங்கள், மருந்து, பால் மா, உலர் உணவுகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.