Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th February 2024 18:57:18 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் மஹா போதி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு நன்கொடை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் மீகொடை நதுஹேன மஹா போதி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சிறுவர்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் அத்தியாவசியமான பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த சமூகம் சார்ந்த திட்டத்தில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அனுசரனையில் கலிப்சோ இசையுடன் பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.