12th February 2024 14:24:26 Hours
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தனது வருடாந்த புத்தக நன்கொடை நிகழ்ச்சியை இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமங்கா பெர்னாண்டோ தலைமையில் தனது பல படையலகுகளில் நடாத்தியது.
இத்திட்டம் 2024 ஜனவரி 06 ஆம் திகதி 4 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் ஆரம்பமாகியது. இத்திட்டத்தில் எதிர்வரும் காலத்திற்கு தேவையான பாடசாலை கற்றல் உபகரணங்கள் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 368 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2024 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு நுழையும் 19 பிள்ளைகளுக்கு தலா ரூ.2000.00 பெறுமதியான பாடசாலை பொருட்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியைத் தொடர்ந்து, மற்றொரு நன்கொடை நிகழ்ச்சி 11 ஜனவரி 2024 அன்று 7 வது (தொ) இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் நடைபெற்றது, இதன் போது 299 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை பொருட்கள் வழங்கப்பட்டன.
1 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் 13 ஜனவரி 2024 அன்று, 404 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், 6 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 487 பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், 397 மாணவர்களுக்கு பாடசாலை உதவிப் பொதிகளும், தரம் 1 முதல் 6 வரையிலான 241 மாணவர்களுக்குப் பாடசாலை பைகளும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, அதன் உறுப்பினர்கள் மற்றும் அனுசரனையாளர்களின் நிதியுதவியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நாடளாவிய நன்கொடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.